அரசாங்கத்தின் பிழையான நிதிக்கொள்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
அரசாங்கத்தின் பிழையான நிதிக்கொள்கைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சீனி விலை அதிகரிப்பு குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி விலை அதிகரிப்பிற்கான பிரதான ஏதுவாக துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக பிரதான செய்தித்தாள்கள் அறிக்கையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனி விலையேற்றம் கோவிட் பெருந்தொற்று நிலைமையினால் ஏற்பட்டது கிடையாது, இது அரசாங்கத்தின் பிழையான நிதிக் கொள்கைகளினாலும், தவறான நிதி முகாமைத்துவதினாலும் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அரசாங்கத்தின் தவறுகளினால் இன்று நாட்டு மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.