முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்துச் செய்யும் யோசனையில் அவர்களின் ஓய்வூதியங்கள் நீக்கப்படாது என்று நீதிமன்றில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் குறித்த ஓய்வூதியங்கள் நீக்கப்படாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
கூடுதல் சலுகைகளே
மாறாக 1986 ஆம் ஆண்டின் ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைவியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகைகளே குறைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்துச்செய்தல் யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri