முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் இரத்து! பரிந்து பேசும் அரசியல்வாதிகள்..
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படக்கூடாது. தற்போது வழங்கப்படும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் பலம் பொருந்திய, அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வறுமை நாடுகளில்கூட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் ஓய்வுகாலத்தில் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதிகரிக்கப்பட வேண்டிய ஓய்வூதியம்..
எனவே, இலங்கையில் இவற்றை நீக்குவதற்கு முற்படாமல், இந்த நாட்டில் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றைச் செய்ய வேண்டும்.

எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தை நீக்க முடியாது. அது அரசமைப்பில் உள்ள விடயம்.
தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பணியாள் தொகுதி மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam