இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஓய்வூதிய திட்டம்
இலங்கையில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கடற்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய முறை

விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா எனவும், மாதாந்தம் அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச செலவீனம்

மேலும், இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா ஆகும்.
மாதாந்த அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும்.
இதேவேளை, ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri