நெருக்கடியில் அரச வருமானம்:ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவைப்படும் பெருந்தொகை பணம்
இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா எனவும், மாதாந்தம் அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை கலால் அதிகாரி மற்றும் ஒழுங்குபடுத்துபவர்கள் சங்கத்தின் 70ஆவது வருடாந்த மாநாட்டில் நேற்று (18.11.2022) கலந்துக்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியத்திற்கான செலவு
மேலும் தெரிவிக்கையில்,இவ்வருட வரவு செலவுத் திட்டத்துக்கான அரச செலவீனம் 7,800 பில்லியன் ரூபா ஆகும். மாதாந்த அரசாங்க சம்பளக் கட்டணமாக 92 பில்லியன் ரூபா காணப்பட வேண்டும்.
இதேவேளை, ஓய்வூதியத்திற்காக 26 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் கலால் திணைக்களம்
அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் பட்டியலில் கலால் திணைக்களம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை, மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு, அதற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலால் திணைக்களத்தின் கீழ் தனியான ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாமதமின்றி அதனுடன் தொடர்புடைய மதுபானங்களை இனங்கண்டு அவற்றை சமூகமயப்படுத்துவதை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri
