கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றில் விதிக்கப்பட்ட உத்தரவு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதி கூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.ஆர.ஐ ஜெமில் முன்னிலையில் நேற்று (02.04.2024) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தண்டப்பணம்
இதில், ஏழு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், அதிகூடிய விலையில் அரிசியினை விற்பனை செய்த நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணமும் ஏனைய ஆறு பேருக்கும் 35,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam