பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சிக்கிய நபர் - வெளியான பகீர் தகவல்
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் பாணந்துறை-ஹொரேத்துடுவ பாலத்திற்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒருவரை சோதனை செய்தபோது, அவரது சட்டைப் பையில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கான 3 தோட்டாக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பேனா துப்பாக்கி
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி, வேலை செய்யும் நிலையில் உள்ளதெனவும், கொலைக்கு மிகவும் இலகுவாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்ட இந்த துப்பாக்கி, ஒரு நபரைக் கொல்ல எந்த நேரத்திலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு
சந்தேக நபர் இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சந்தேக நபர் மொரட்டுவ - மோல்பே பகுதியை சேர்ந்த 43 வயதுடையவராகும். அவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
