பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் மனுக்கள் தள்ளுபடி: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி!

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation Nothern Province High Court of Sri Lanka
By Theepan May 19, 2026 08:19 AM GMT
Report

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண ஆளுநரின் விசாரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எழுத்தாணை மனுக்களையும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நேற்று(18.05.2026) தள்ளுபடி செய்துள்ளது.

அத்துடன், மனுதாரர்களால் பெறப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை இரத்துச் செய்த நீதிமன்றம், ஆளுநரின் விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 184இன் கீழ் ஆளுநரின் கட்டளையின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

இடைக்காலத் தடையுத்தரவு 

பருத்தித்துறை நகர சபையினால் மரக்கறிச் சந்தையை மாற்றுவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது, ஆளுநர் அல்லது உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தல்களை மீறும் செயலாகக் கருதப்படக் கூடாது எனவும், தவிசாளர் சபையின் தீர்மானத்தையே கைக்கொள்ள வேண்டும் என்பதால் 184ஆம் பிரிவின் கீழ் இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த விசாரணைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் மனுக்கள் தள்ளுபடி: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி! | Pedro City Council Petition Governor

வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி புவனேந்திரராஜா ஜனந்தன், தனது சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்படுவது அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முடக்கும் எனவும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, விசாரணையை முன்னரே தடுக்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.

அத்துடன், மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாகவும் அவர் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த (08.04.2026) அன்று தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது.

நீதிமன்ற கட்டளை

வர்த்தமானி அறிவித்தல், அரச இணையத்தளத்தில் வெளியாவதற்கு முன்னதாகவே அதன் ஆங்கிலத்தின் கூகுள் மொழிபெயர்ப்பியின் மொழிபெயர்ப்பை அவர் பதிவிட்டு தவிசாளரை ஏளனம் செய்திருந்தமை, இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளதை வெளிப்படுத்துவதாக மனுதாரர் தரப்பு வாதிட்டுள்ளது. எனினும், வர்த்தமானி அறிவித்தல்கள் உடனுக்குடன் வெளியாகிவிடும் எனவும், அது பிரசுரிக்கப்பட்ட பின்னரே அவர் பதிவிட்டிருந்தார் எனவும் அரச தரப்பு வாதிட்டுள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வர்த்தமானி வெளிவந்த பின்னரே அப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் முன்னரே அதனை அறிவார் எனக் கூறுவது நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் மனுக்கள் தள்ளுபடி: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி! | Pedro City Council Petition Governor

நீதிமன்றத்தின் இந்தக் கட்டளை தொடர்பில் வாதிட்ட மனுதாரரின் சட்டத்தரணி கு.குருபரன், நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை இரத்துச் செய்வதற்காக, மன்றை பிழையாக வழிநடத்தினார் என்ற வாதத்தை அரச சட்டவாதி உத்தியாகக் கையாண்டமை துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவு அரச இணையத்தில் வர்த்தமானி வெளியாவதற்கு முன்னரே இடப்பட்டுள்ளது என்பதே தமது தொடர்ச்சியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகர சபை தவிசாளரைப் பதவி நீக்க வேண்டும் என்ற அரசியல் தேவை தேசிய மக்கள் சக்திக்கும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனுக்கும் மற்றும் தேசிய மக்கள் சக்தியினால் நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநருக்கும் இருந்தது என்ற மனுதாரரின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்தச் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டடுள்ளன என்றும், இதில் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

ஆளுநரின் விசாரணை

விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஏற்கனவே மனுதாரருக்கு விசாரணை தொடர்பில் விடயங்களைக் குறிப்பிட்டு, சமூகமளிக்குமாறு கடிதம் அனுப்பியதன் ஊடாக அவருக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதி சுட்டிக்காட்டியள்ளார்.

மேலும், விசாரணை செய்வதற்கான சட்ட முகாந்தரம் இல்லை என்றால் அதனை விசாரணை அதிகாரிக்கு முன்பாகவே பூர்வாங்க ஆட்சேபனையாக முன்வைக்க முடியும் எனவும், அவ்வாறு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் நீதிமன்றம் அவ்விடயம் தொடர்பில் கருத்திற் கொள்ள முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் மனுக்கள் தள்ளுபடி: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி! | Pedro City Council Petition Governor

அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், ஆளுநரின் விசாரணையை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கி இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்துப் பரிசீலித்து வரும் மனுதாரர் தரப்பு, விசாரணையின் போது அதிகாரியின் முன்னால் பூர்வாங்க சட்ட விடயங்களை எழுப்புவது தொடர்பான சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக சட்டத்தரணி கு.குருபரன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் தங்க சங்கிலியுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..! விரைந்து செயற்பட்ட பொலிஸார்

யாழில் தங்க சங்கிலியுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..! விரைந்து செயற்பட்ட பொலிஸார்

மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம்.. கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய கோரும் விமல்

மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் அபாயம்.. கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய கோரும் விமல்

மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US