யாழில் தங்க சங்கிலியுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி..! விரைந்து செயற்பட்ட பொலிஸார்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞர்கள்
குறித்த நபர்களை வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும், அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர்.
இருந்த போதிலும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக் கொண்டுவார்கள், அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததையடுத்து , நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி செல்வதை கண்ணுற்று, நெல்லியடி பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, அறுக்கப்பட்ட தங்க சங்கிலி அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam