ஊரடங்கில் நடைபாதை கடைகள் - நகரசபையின் அதிரடி நடவடிக்கை
ஊரடங்கு காலப்பகுதியில் வவுனியா நகர்ப்பகுதியில் செயற்பட்டுவந்த நடைபாதை கடைகள் வவுனியா நகரசபையால் இன்று அகற்றபட்டுள்ளது.
குறிப்பாக சந்தை சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களை வைத்து விற்பனை செய்த வியாபாரிகளின் கடைகள் என்பன இன்று அகற்றபட்டுள்ளது.
இதன்போது அவர்களிடமிருந்த பொருட்களும் நகரசபை உத்தியோகத்தர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன்,
குறித்த விற்பனை நிலையங்கள் இன்றையதினம் அகற்றப்பட்டுள்ளது.ஆயினும் நாங்கள் சென்ற பின்னர் மீளவும் குறித்த வியாபாரிகள் அந்தப்பகுதிக்கு சென்று பொருட்களை விற்பனை செய்யும் நிலமை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையில் நகரசபை தவிசாளர் மற்றும் பொலிஸார், சபையின் ஊழியர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.







துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
