அமைதியான முறையில் தீர்வுகள் காணப்பட வேண்டும்: பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ்
நாட்டின் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டுமென புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில், நேற்றைய தினம் (17) இலங்கையின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை மக்களுக்காக தாம் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வன்முறைகளற்ற தீர்வுகள்
"ஊழல் மோசடிகள், தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தொடர்ந்து, வன்முறைகளை தவிர்த்து அனைவருடைய உரிமைகளையும் மதிக்கும் வகையில், பேச்சுவார்த்தை மூலமும் அமைதியான வழியிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
