ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி நூதன பேரணி (Photos)
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு இன்றாகும்.
இதனை முன்னிட்டு கொழும்பில் இன்று விசேடமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதியை தேடி மரணித்தவர்களின் அமைதியான போராட்டம் என இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பெயரிடப்பட்டுள்ளதுடன் கொழும்பு நகர் முழுவதும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
மரணித்தவர்கள் எழுந்து நீதி தேடி செல்வது போல் பேரணியில் கலந்துக்கொண்டுள்ளவர்கள் வெள்ளை ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
ஈஸ்டர் தக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நூதன எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு புதுக்கடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் ஆரம்பமானதுடன் மாலை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் காலிமுகத் திடல், கோட்டா கோ கிராமத்தில் நிறைவடையவுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
