திருமண பந்தத்தில் இணைந்தாா் அமைதிக்கான நோபல் வெற்றியாளா் “மலாலா“
அமைதிக்கான நோபல் பரிசு வெற்றிகொண்ட பாகிஸ்தானின் மனித உாிமைகள் ஆர்வலா்- மலாலா யூசுப்சாய் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இஸ்லாமிய நிகழ்வு ஒன்றில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டாா்.
மணமகனும், மணமகளும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த ”நிக்கா” நிகழ்வில் அவரும் அஸர் மாலிக்கும் பங்கேற்றனா்.
இந்தநிலையில் 24 வயதான மனித உாிமைகள் ஆர்வலர்- மலாலா, இது தனது வாழ்க்கையில் "ஒரு மதிப்புமிக்க நாள்" என்று கூறியுள்ளாா்.
தற்போது 24 வயதாகும் மலாலா, சிறுமிகள் கல்வி கற்கும் உரிமைக்காக, 2012 ஆம் ஆண்டு தமது 12 வயதில் குரல் கொடுத்ததற்காக பாகிஸ்தானில், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானாா்.
இதன்பின்னா். மலாலாவும் அவரது குடும்பமும் பர்மிங்காமிற்கு இடம் பெயர்ந்தனர்.
இதனையடுத்து, 17 வயதில், அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இளையவா் என்ற பெருமையை அவா் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.