லெபனானில் இலக்கு வைக்கப்பட்ட 50இற்கும் மேற்பட்ட தளங்கள்..
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 50க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் இருந்து ஏற்படவிருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்..
குறிப்பாக, இஸ்ரேலிய எல்லைப் பகுதி மற்றும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களைத் தாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சுரங்க வளாகம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் தரைமட்டமாக்கியுள்ளது.

அத்துடன், தெற்கு லெபனானின் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, ஒரு வீட்டின் குழந்தை படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 23 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan