பிரித்தானியா ஆசை காட்டி இரண்டு பெண்கள் செய்த மோசமான செயல்
பிரித்தானியாவில் பண்ணையொன்றில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரண பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரின் உள்ளூர் பிரதிநிதிகளான செயற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கணேமுல்லை மற்றும் தம்புத்தேகம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
முன்னணி ஆடை உற்பத்தி
நாட்டின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் மனித வள முகாமையாளராகப் பணியாற்றும் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்தாண்டு டிசம்பர் 04 ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவர் பிரித்தானியாவில் வசிப்பதாகவும், அங்குள்ள சமையல்கலைஞர் ஒருவர் ஊடாகவே தூல்லாவ என்று அழைக்கப்படும் பிரதான சந்தேக நபரை அடையாளம் காண முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இரண்டு காய்கறி பண்ணைகள் மற்றும் 11 உணவகங்கள் தன்னிடம் உள்ளதாக பிரதான சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் அந்த சமையல்கலைஞர் தொடர்பு கொண்டு, சந்தேக நபரின் பண்ணையொன்றில் வேலை பெற்றுத் தருவதற்கு ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
தனது பண்ணைகள் மற்றும் உணவகங்களில் வேலை செய்யும் இலங்கையர்களின் உறவினர்கள் ஊடாக உண்டியல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறி, இலங்கையிலுள்ள சிலரது வங்கிக் கணக்கு இலக்கங்களை அவர் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கு
கம்பளை, கடுவலை, கணேமுல்லை, தம்புத்தேகம, கொத்தட்டுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நபர்களின் பெயர்களில் பல தடவைகள் இந்த பணத்தைப் பெற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில் உள்ள துறவி ஒருவருக்கு உதவி செய்வதாக கூறி, முறைப்பாட்டாளரை நம்ப வைத்து, அந்த துறவியின் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாவை வைப்பிலிடச் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பணத்தை பெற்று சில மாதங்களின் பின்னர் தான் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அவரது பிள்ளைகள் அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி ஏமாற்றியுள்ளார்.
அதன் பின்னரே இந்த மோசடி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan