பூந்தோட்டம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களிடமிருந்து இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
வவுனியாவில் நேற்றையதினம் 12 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவில் நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் பூந்தோட்டம் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புகளை பேணியதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூந்தோட்டம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமை புரியும் ஊழியர்களுக்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டுள்ளன.
இதேவேளை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களும் பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு
பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

