வவுனியா பொதுசந்தையில் 112 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
வவுனியா பொது சந்தையில் 112 பேருக்குச் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பொது சந்தையில் கடந்த வாரம் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கோவிட் பரவலைத் தடுக்கும் வகையில் வவுனியா பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என 112 பேருக்குச் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
