மன்னார் பேசாலை பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பேசாலை பகுதி மீனவர்கள் மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்த நபர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பரிசோதனைகள் மன்னார் பிரதேச சபை மற்றும் பேசாலை பொது வைத்தியசாலையிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் நானாட்டான் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகஸ்தர்கள் இணைந்து பேசாலை பகுதிகளில் மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தலிலிருந்த நபர்களுக்குமான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பேசாலையில் உள்ள பிரதேச சபை அலுவலகத்தில் 224 நபர்களுக்கும் பேசாலை வைத்திய
சாலையில் 349 நபர்களுக்குமாக மொத்தம் 573 நபர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேற்படி மாதிரிகள் கொழும்பு மற்றும் முல்லேரியா
வைத்தியசாலைகளுக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


