கொட்டகலை பகுதியில் 90 பேருக்கு பி.சி.ஆர் இதுவரை 48 பேருக்கு தொற்று உறுதி!
கொட்டக்கலை சுகாதார வைத்திய அதிகார காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 90 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்திய அதிகாரி ஜே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர் என்ற அடையாளம் காணப்பட்டவர்களுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர்.
மேற்படி நபர்கள் கொட்டக்கலை, தலவாக்கலை, வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் வாகனங்களின் ஊடாக அழைத்து வரப்பட்டுக் கொட்டக்கலை பிரதேச சபை வளாகத்தில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி நபர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில், 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan