அரச ஊழியர்களின் ஊதியம் வழங்குவதில் புதிய முடிவு
அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் ஊதியத்தை மாதத்தில் வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.
நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை வெவ்வேறு தினங்களில் வழங்கும் வகையில் பணத்தை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு திறைசேரியின் நடவடிக்கை திணைக்களம் அரச நிறுவனங்களின் பிரதான நிதி அதிகாரிகள், கணக்காய்வாளர்கள், நிதிப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், அரச ஊழியர்களுக்கான ஊதியம் மாதந்தோறும் இருவேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்கப்படவுள்ளது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam