சி.ஐ.டியில் முன்னிலையான பவித்ரா வன்னியாராச்சி - வாக்குமூலம் பதிவு
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தற்போது வாக்குமூலம் அளித்து வருவதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, பல முன்னாள் அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் இன்று சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் அழைக்கப்பட்டு விசாரணைகளை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று (26) முன்னிலையாகியுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
Tamizha Tamizha: அரங்கத்தில் இளம்பெண் வடித்த கண்ணீர்... அப்பாவின் கடைசி முகத்தை கூட பார்க்கலையே Manithan