ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ள கோவிட் தொற்றாளர்கள்
இலங்கையில், சுமார் 5,858 கோவிட் நோயாளிகள் 13 ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 4,720 பேர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் கோவிட் சிகிச்சைக்காக மேலும் ஐந்து ஆயுர்வேத மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 299 கோவிட் நோயாளிகளுக்கு மட்டுமே மேற்கத்திய மருத்துவ மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுகிறது.
இந்தநிலையில், ஆயுர்வேத மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சை, ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய மருத்துவ நடைமுறைகள் இரண்டின் கலவையாக மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை, ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் நோயாளிகளிடையே ஏற்படும் சிக்கல்கள் மிகக் குறைவு என்றும், இன்றுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
