முல்லைத்தீவில் தற்காலிக மருத்துவ விடுதியால் அவதியுறும் நோயாளர்கள்
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட மருத்துவமனையில் நோயாளர்களுக்கான சரியான இடவசதி இல்லாததன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இங்கு ஆண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்2) பெண்களுக்கு ஒரு விடுதியும் (இலக்கம்1) காணப்படுகின்றது.
அவதிக்குள்ளாகும் நோயாளர்கள்
இந்த இரண்டு விடுதிகளிலும் சுமார் 60 பேர் வரையிலேயே தங்கி நின்று சிசிக்சைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மருத்துவ விடுதிகளில் போதிய இடவசதி இல்லாத நிலையினால் நிலத்திலும் கட்டடங்களின் ஓரங்களிலும் நோயாளர்கள் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு மருத்துவ விடுதிகளும் தங்காலிக மருத்துவ விடுதிகளாகவே கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள மெத்தைகள் நோயாளர்களுக்கு போதாத நிலை காணப்படுகின்றது.
போருக்கு முன்னர் 110 மில்லியன் ரூபா நிதியில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ள போதும் நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ விடுதிகள் இரண்டு தற்காலிகமாகவே கட்டப்பட்ட நிலையில் இதுவரை மாற்று வழி எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மருத்துவ விடுதி
மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் நோயாளர்கள் கட்டடத்தின் ஓரப்பகுதிகளில் நோயாளர்கள் படுத்து உறங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ விடுதிகளை கட்டிக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதும் அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததாக இல்லை.
ஆனால் ஏனைய மருத்துவ சிகிச்சை மற்றும் ஏனைய வசதிகள் மாவட்ட மருத்துவனைக்கு சரியாக இருந்தும் நோயாளர்களுக்கான மருத்துவ விடுதி சரியாக இல்லாத காரணத்தினால் மாவட்டத்தில் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் நோயளர்கள் பெரும் அவதியினை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ விடுதி தொடர்பில் வடமாகாண ஆளுனர் கவனத்தில் எடுத்து இனிவரும் காலங்களில் நிதந்தர மருத்துவ விடுதிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது நோயாளர்களின் எதிர்பார்பும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்புமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
