சுகாதார அமைச்சின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகள்
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் சுகாதார அமைச்சின் முன்பாக சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பார்வையிழந்த மற்றும் அங்கவீனமடைந்த நோயாளிகள் சிலரே இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம்
கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றிருந்தார்.
எனினும் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு வேண்டப்பட்டவர்களை மாத்திரம் தெரிவு செய்து இழப்பீடு வழங்கியுள்ளதாக சிவில் மற்றும் மருத்துவ உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பாதிக்கப்பட்ட நோயாளிகள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
