ஜே.பி.வியால் பொது சொத்துகளுக்கு 200 பில்லியன் பாதிப்பு! எதிர் தரப்புக்கள் குற்றச்சாட்டு
ஜே.பி.வி என்றழைக்கப்படும் போல்ஷ்விக் லெலின் கட்சி மற்றும் தமிழீழ விதலைப் புலிகள் இந்த நாட்டில் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்குரோத்து அடைந்த போது 37 பில்லியன் டொலரே வெளிநாட்டு கடனாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜே.பி.வி தரப்பு
பொதுச் சொத்துக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் பெரும் தண்டனை வழங்கக் கூடிய இரு குழுவினரே நாட்டில் உள்ளனர்.ஜே.வி.பி மற்றும் தமிழீழ விதலைப் புலிகள் அமைப்பாகும்.
அமைச்சர் லால்காந்த ஒரு கூட்டத்தில் நாங்கள், டான்ஸ்போமருக்கு தீ வைத்தோம், பேருந்துகளை கொளுத்தினோம் பல குற்றங்களை செய்தோம் என்று பெருமையாக சொன்னார்.
அதுவே போதும், குற்றப்பத்திரிகை தாக்க செய்ய வேண்டியதில்லை. இந்தியாவின் முன்னாள் வெளிநாட்டு செயலாளர் சிவசங்கர் மேனனே 200 பில்லியன் அமெரிக்கன் டொலர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றுக்கு யாரும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க முயற்சித்த வரை, அரசாங்க சொத்துக்கள் மற்றும் பொது சொத்து,பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவு
76 வருடங்கள் நாட்டை நாசப்படுத்தியதாக கூறும் புதிய அரசாங்கம், ஜே.வி.பி என்ற பெயரில் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவை மறந்து விட்டார்களா?
மேலும், முன்னாள் பிரதம மத்திரி சிறிமாவோ பணடாரநாயக்க அன்று 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சின் பின்னர் விசாரணை ஆணைக்குழுவை நியமித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார்.
ஆனால் ஜே.ஆர்., பிரமதாச போன்ற தலைவர்கள் அரஜாகத்தால் ஜே.பி.வி தலைவர்களை கொன்றொழித்தார்கள்.மேலும் ரணில் போன்றவர்கள் நடத்திய அநீதிக்கான சட்டத்திட்டங்கள் இந்நாட்டின் குற்றங்கள் மறைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
அன்று இவற்றுக்கு பொதுவான விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து குற்றவாளிகள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இவ்வாறான நிலைமை ஏற்பட்டிக்காது. அத்தோடு ரணில் விக்கிரமசிங்கவின் அநியாயங்களும் வெளிவந்திருக்க கூடும்.
ஆனால் இன்றைய நிலையிலும் பொது விசாரணை ஆணைக்குழுக்களை ஏற்படுத்தலாம்."பொதுச் சொத்துக்கள் பாதுகாப்புச் சட்டம்" இருக்கிறதென்றால் இன்று கூட நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
