பாட்டலி சம்பிக்க ரணவக்க கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த கலந்துரையாடல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த விருந்தகத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வரவேற்றதுடன், கரைச்சி பிரதேச சபையில் சுயேட்சைக்கூழு ஊடாக தெரிவாகிய பிரதேச சபை உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு தலைவர் மனோகரன் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
தொடர்ந்து விருந்தக மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri