மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்! நிஹால் தல்துவ
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மத போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ இன்று (17.05.2023) தெரிவித்துள்ளார்.
பயணத் தடை
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (16.05.2023) கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றுள்ளது.
இருப்பினும், மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பாதிரியார் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து பேசிய காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |