போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்! முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பரபரப்பு தகவல்
சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாச ஆகியோர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சீடர்கள் என முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்சக்கள் மாத்திரமல்ல சஜித் பிரேமதாச, ஜலனி பிரேமதாச, ரோசி சேனாநாயக்க, தப்புல லிவேரா, சாலிய பீரிஸ் போன்றவர்கள் ஜெரோம் பெர்னாண்டோவின் சீடர்களின் பட்டியலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் அதிகாரம் படைத்தவர்களுடன் இருக்கும் பொலிஸாரால் அவரை ஒரு போதும் தொட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஜெரம் பெர்னாண்டோவின் சமய ஸ்தலத்தை நிர்மாணிப்பதற்காக காணி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்ததற்கு Born Again கும்பலும் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
