இலங்கையின் ஊடகத்துறை தொடர்பாக கேள்வி எழுப்பும் போதகர் ஜெரோம்
சர்ச்சைக்குரிய போதகராக கருதப்படும் ஜெரோம் பெர்னாண்டோ, இலங்கையில் ஊடகத்துறையின் செயற்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தனக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு மீதான நீதிமன்றத் தீர்ப்பை, ஊடகங்கள் தெரிவிக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இலங்கையின் உயர்நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு மீதான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்ததாக பெர்னாண்டோ கூறியுள்ளார்.
சுமார் 20 மாதங்களாக ஊடகங்கள் தங்கள் சொந்த முன்கூட்டிய கருத்துக்களைக் கூறி வந்த நிலையி;ல் இது நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக எந்த ஊடக நிறுவனமும் அல்லது செய்தித்தாளும் இந்த செய்தியை வெளியிடவில்லை என்று பெர்னாண்டோ கூறியுள்ளார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் சுயமாக தம்மை தீர்க்கதரிசியாக அறிவித்து கொண்ட ஜெரோம் பெர்ணான்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மதத்தலைவர்கள் சிலரால், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |