மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்!
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மத போதகர் ஜெரோமின் வியாபார நிறுவனங்கள், மத நிலையங்கள், மற்றும் அவருடைய மனைவியின் கணக்கு என்பனவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பன்னிரண்டு வங்கி கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுமார் 1226 கோடி ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை பிரிவு அறிக்கை
இந்நிலையில் மதபோதகர் ஜெரோம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து நீதிமன்றில் குற்ற விசாரணை பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
இதேவேளை, மத போதகர் ஜெரோமிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிரக்கல்ல் டோம் நிறுவனத்தின் பாதுகாப்பு கேமராக்களுக்கு பொறுப்பான தகவல் தொழில்நுட்ப அதிகாரியை நாளை குற்ற விசாரணை பிரிவில் முன்னிலை ஆகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின காமகே உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |