நானுஓயா தொடருந்து நிலையத்தில் பயணிகள் அவதி
நுவரெலியா (Nuwara Eliya) - நானுஓயா பகுதியிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொது மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமிர்த்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் நானுஓயா தொடருந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பற்ற பயணம்
மேலும், அதிக பயணிகள் நானுஓயாவிற்கு வருகை தந்துள்ளதன் காரணமாக தொடருந்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் தொடருந்து மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர்.

அத்துடன், நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை - எல்ல பகுதியை நோக்கி செல்வதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா தொடருந்து நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செய்தி - திவாகரன்


நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri