வட்டுவாகல் பாலத்தில் வீதி சமிக்ஞை அமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை (Photos)
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் பயணம் செய்பவர்கள் வீதி சமிஞ்ஞை இல்லாததால் போக்குவரத்தில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாகவும் பயண இலகுபடுத்தல்களுக்காக வீதி சமிக்ஞைகளை அமைத்துத் தருமாறும் பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரந்தன் - முல்லைத்தீவு செல்லும் வீதியில் வட்டுவாகலில் அமைந்துள்ள பாலத்தில் வீதி சமிஞ்ஞை இல்லாததனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சிரமத்தின் மத்தியில் பிரயாணிகள்
குறித்த வீதியில் அமைந்துள்ள பெரிய பாலத்தில் போக்குவரத்தில் பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுக் குறித்த வாகனம் வீதியைக் கடந்ததன் பிற்பாடே பயணம் செய்ய முடியும்.
ஆகவே இப் பாலத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் சமிஞ்ஞை விளக்குகளை அமைத்துத் தருமாறு பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)