முல்லைத்தீவில் பசிலின் வெற்றி கொண்டாட்டத்தினால் பயணிகள் அசௌகரியம்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையிட்டு வன்னி மக்கள் சார்பாக எனது இதய பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெடி கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி, முள்ளியவளை நகர்ப்பகுதி, ஒட்டுசுட்டான், மல்லாவி போன்ற நகர்ப்பகுதிகளில் முதன்மை வீதிகளில் வெடி கொளுத்திப் போட்டு வீதியால் சென்ற மக்களுக்கு இனிப்புக்களை வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களின் நடவடிக்கையினால் வீதியால் சென்ற மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் வீதி பயணமும் தடைப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் -19 நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான மக்கள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் தடை விதித்துள்ள வேளையில் நாட்டில் மக்கள் ஒன்று கூடலைத் தவிர்த்துவரும் பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
