இலங்கையிலிருந்து பயணிகள் ஜப்பானுக்கு செல்வது இடைநிறுத்தம்
இலங்கையிலிருந்து பயணிகள் ஜப்பானுக்கு பயணம் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு பயணங்களை மேற்கொள்வது தற்காலிக அடிப்படையில் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளில், கடந்த 14 நாட்களுக்குள் பிரவேசித்த அனைத்து பயணிகளும் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கோவிட் திரிவு நாட்டுக்குள் பிரவுவதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும் ஜப்பானில் நிரந்தரமாக வதிவோர் இந்த நாடுகளிலிருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படு;த்தலுக்கு உள்ளாகி பீ.சீ.ஆர் பரிசோதனை செய்து கொண்டதன் பின்னர் ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதி உண்டு என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.