விமானத்தின் அவசரகால கதவை திறந்து திடீரென பாய்ந்த பயணியினால் பரபரப்பு
ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் ஒன்று இன்று அதிகாலை (03) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்த விமானத்தின் அவசரகாலக்கதவைத் திறந்து பயணியொருவர் வெளியே குதித்துள்ளார்.
விமானம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாலும், பிரதான ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்றதாலும் அந்த நபர் வெளியே குதித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையப்பணிகளிலும் இடையூறு
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானப் பயணத்தின்போது சம்பந்தப்பட்ட பயணிக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமானப்பயணத்தின்போது அவர் இரண்டு முறை வாந்தி எடுத்ததாகவும், இந்தச் சம்பவத்தால் விமான நிலையப்பணிகளிலும் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பயணி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் விதிகளை மீறியது குறித்து அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
கோமதியின் பேச்சால் கடுப்பான தங்கராஜ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம் Cineulagam