பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்! உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபையில் அறிவிப்பு
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
குறித்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்த பின்னர், உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்வைத்திருந்தது.
இந்த சட்டமூலத்தின் பல்வேறு ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என குறிப்பிட்டு சட்டத்தரணிகள், அரசியல் தரப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தொடர்ந்து, நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை உள்ளடக்கி சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மகிந்தவின் முடிவால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 528 பில்லியன் ரூபாய் நட்டம்! அநுர வெளியிட்ட அதிரடித் தகவல்
YOU MAY LIKE THIS
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam