இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்
கிளிநொச்சி(Kilinochchi) - இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நேற்று (08-04-2024) நீண்ட இழுபறிக்கு பின்னர் கிளிநொசசி மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் இரணைமடுக் குளத்தின் தற்போதைய நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு பதினையாயிரத்து 693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்பக்களின் முழுமையான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் முன்னுரிமை
அதாவது இரணைமடுக் குளத்தின் கீழான 19,830.81 ஏக்கர் மொத்த நிலப்பரப்பில் T 08 பெரியபரந்தன், R.V.T -05 T -06 T-07 பெரியபரந்தன், T-08 உருத்திரபுரம், T-10 குஞ்சுப்பரந்தன் உள்ளிட்ட பகுதிகள் உள்ளடங்கலாக நான்காயித்து 80.81 ஏக்கர் நிலப்பரப்பு தவிர்ந்த பதினையாயிரத்து 693.63 ஏக்கர் இம்முறை முழுமையாகன பயிர்செய்கை மேற்கொள்வதற்கும் இம்முறை சிறுபோக செய்கை நிறுத்தப்பட்ட குறித்த பகுதிகள் ஆடுத்த போகத்தில் சுழற்சி முறையில் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 23 கமக்கார அமைப்புக்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இரு அமைப்புக்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் ஆதரவாக வாக்களித்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |