பருத்தித்துறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்: போராட்டத்திற்கு அழைப்பு
இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
கவனயீர்ப்பு பேரணி
பருத்தித்துறை நகரில் தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகரசபைக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்படை முகாம் மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகவுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
பேரணி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபெறும். அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு என்பிபி தவிர்ந்த பருத்தித்துறை நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெயகோபி குறிப்பிட்டார்.
எனவே, பருத்தித்துறை மக்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25