மட்டக்களப்பில் தேர்தல் சட்டத்தை மீறிய கட்சி ஆதரவாளர்கள் கைது
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரச்சார சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(30.10.2024) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள சுவர்களில் அதிகாலை 4 மணிக்கு சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தபோதே இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி கட்சின் ஆதரவாளர்கள் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களிடம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட சுவரெட்டிகளை கைப்பற்றியதுடன் கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
