தென்னிலங்கையில் விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் - யுவதி உட்பட 21 பேர் கைது
பாணந்துறை, ரஸ்கிந்துவ பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது யுவதி உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
DJ இசை
முறையற்ற முறையில் DJ இசையை பயன்படுத்தி விருந்து நடத்துவதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பலரிடமிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவில் உள்ள இளம் பெண் பொலிஸ் காவலில் உள்ள நிலையில், ஏனைய 21 சந்தேக நபர்களும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri