நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வ கட்சி மாநாடு கூட்டப்பட வேண்டும் – பந்துல குணவர்தன
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வ கட்சி மாநாடு கூட்டப்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இவ்வாறு சர்வ கட்சி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டில் நிலவும் பிரச்சினைகளை அரசியல் கோணத்தில் நோக்கப்படக்கூடாது. உண்மையிலேயே எழுந்துள்ள பிரச்சினைகள் அதற்கான காரணிகள் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆராயப்பட வேண்டும்.
அரசியல் ரீதியற்ற தொழில்நுட்ப ரீதியில் இந்தப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவது பொருத்தமானதாக அமையும்.
எதிர்க்கட்சியினருக்கு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியுமாயின் சர்வ கட்சி மாநாட்டில் அதனை முன்வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri