கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் சில பகுதிகள் (Video)
நாட்டின் சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை வீழ்ச்சி பதிவாகி வருகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு
இந்த நிலையில் கொழும்பிலுள்ள சில பகுதிகளிலும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குறிப்பாக கொழும்பு - வெள்ளம்பிட்டி பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் இந்த சீரற்றநிலையானது எதிர்வரும் 36 மணிநேரத்திற்கு தொடரும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.



