நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (24) இரவு 8.00 மணி முதல் இன்று இரவு 8.00 மணி வரை 24 மணிநேர மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று வரை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தற்போது நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
