ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
ஜனவரி 16 அன்று கொழும்பு - ஜிந்துபிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர்.
நேற்று (19) மற்றும் அதற்கு முந்தைய நாள் (18) ஆகிய இரு தினங்களிலும், ஜிந்துபிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடலோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த
அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதற்காக 04 கிராம் 800 மில்லிகிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்பதுடன் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
சந்தேக நபர்கள் ஜனவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், ஒரு சந்தேக நபருக்கு 23 ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

மீதமுள்ளவர்கள் ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |