மட்டக்களப்பில் பல பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையில் 2இலட்சத்து 78ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இதுவரையில் 02இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 58கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8525பேர் கோவிட்டினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
