உட்கட்சி மோதல்! சம்பந்தனுடன் பேசத் தயாராகும் பங்காளிகள் - சுமந்திரனுக்கு அழைப்பில்லை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் மற்றும் உட்கட்சி மோதல்கள் பற்றி தலைவர் இரா.சம்பந்தனுடன்(R.Sampanthan) விசேட சந்திப்பை இன்றையதினம் நடத்தவுள்ளன.
எனினும் இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு(M.A.Sumanthiran) அழைப்பு விடுக்கப்படாதிருப்பது பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு இலங்கையின் கணக்கு ஒப்புவித்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் கடிதம் எழுதியதையடுத்து கூட்டமைப்பிற்குள் காணப்படுகின்ற நீண்டகால உட்கட்சி மோதல்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், கூட்டமைப்பின் இதர பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஊடகங்கள் வாயிலாகக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிலையிலேயே பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் விசேட சந்திப்பை கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்றைய தினம் நடத்துகின்றனர்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri