சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல அரசியல்வாதி! வைத்தியசாலையில் அனுமதி
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் அனைத்து தரப்பினரும் அரசியலை விலக்கி சிக்குன்குனியா மற்றும் டெங்கு பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நோய்த்தாக்கம் தடுக்கப்பட வேண்டும்..
“சிக்குன்குனியா வைரசால் பாதிக்கப்பட்டு தற்போது நான் மருத்துவமனையில் உள்ளேன் எனவும் உள்ளூராட்சி அமைப்புகளின் நிர்வாகங்களை கட்டுப்படுத்த பல கட்சிகள் களத்தில் இறங்கியிருப்பதை நான் பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், சிக்குன்குனியா மற்றும் டெங்கு பரவலைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எண்ணுகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மருத்துவமனையின் அருகே ஒரு நிலப்பரப்பு நீரால் நிறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை (CMC) இதைப் புறக்கணித்து, இப்பகுதிகளை சுத்தம் செய்ய தவறியுள்ளதுபோல் தெரிகிறது,” எனவும் குற்றம்சாட்டினார்.
மொத்தமாக, மக்கள் சுகாதாரம் தொடர்பான இக்கட்டான சூழ்நிலையில், அரசியல் சச்சரவுகளை ஒதுக்கி, நோய் பரவலை தடுக்கும் துரித நடவடிக்கைகள் இப்போது தான் மிகவும் அவசியமாக உள்ளதாக டொக்டர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri