பிரித்தானியாவை அபாயகரமான பகுதியாக அறிவித்த பிரபல நாடு
பிரித்தானியா, நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் நோர்வே ஆகியே நாடுகளை அபாயகரமான பகுதிகளாக பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா அறிவித்துள்ளது.
இந்த நான்கு நாடுகள் அபாயகரமான பகுதிகளாக வகைப்படுத்தப்படும், ஏனெனில் அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு அதிகமாக உள்ளது என்று ஆஸ்திரியா கோவிட் கொள்கை ஒருங்கிணைப்பாளர் Katharina Reich தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் பூஸ்டர் தடுப்பூசி மற்றும் தொற்று பாதிப்பில்லை என சமீபத்தில் மேற்கொண்ட பிசிஆர் சோதனையைக் காட்டாவிட்டால் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும் என Reich கூறியுள்ளார்.
ஒருபுறம் ஒமிக்ரோனைப் பற்றி மேலும் அறியவும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் அழுத்தத்தைக் குறைக்க மருத்துவமனைகளுக்கு நேரம் கொடுக்கவும் ஊரடங்கு நேரத்தை நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும் என Katharina Reich தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸுக்குப் பிறகு ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கும், ஐரோப்பாவின் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கும் இரவு 10 மணி ஊரடங்கு உட்பட புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரியா அறிமுகப்படுத்தியுள்ளது.