சுவிற்சர்லாந்தில் திங்கள் முதல் ஒரு பகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது!

Covid Switzerland
By DiasA May 26, 2021 09:28 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதி திங்கள் முதல் இயல்பு வாழ்வுக்கு மீளத் திரும்பவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில்,நடன விடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும், வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பொதுவிழாக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆகக்கூடியது 300 பொதுமக்கள் பார்வையாளர்களாக்கொண்டு நடைபெறலாம்.ஆடவைத் திங்கள் (யூனி 2021) நிறைவில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் சுவிட்சர்லாந்து நடுவனரசின் நல்வாழ்வு (சுகாதாரத்துறை) அமைச்சர் அலான் பெர்சே அரசின் நோய்த்தடுப்பு வழிமுறை உரிய நற்பலனை அளித்திருப்பது தமக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,கடந்த நாட்களில் ஒரு பகுதி தளர்வுகளை சுவிஸ் அரசு அறிவித்தபோதும், புதிய தொற்றுக்களின் தொகை இறக்கக்கோணமாகவே உள்ளது. இதன் பொருள் கடந்த நாட்களின் சுவிசரசின் செயற்பாடுகள் உரிய நற்பலனை அளித்துள்ளது என்பதாகும். «எங்கள் கூற்றின்படி நாம் எமது வழியில் மேம்பட்டுவருகின்றோம், ஆனால் பாதையின் முடிவை இன்னும் அடையவில்லை.

ஆதலால் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்போம் என்றார். கடந்த புதன்கிழமை மாநில அரசுகளுடன் சுவிற்சர்லாந்து நடுவனரசு ஆழமான விரிவான கலந்தாய்வுகளையும், கருத்துப்பகிர்வுகளையும் ஆற்றியிருந்தது.

இதன் பெறுபேறாக நிலைப்புள்ளி பொருளாதாரத்தை உறுதி செய்யவும், மேலும் தளர்வுகளை மாநில அரசுகள் கோரியிருந்தன.நடுவனரசும் மாநிலங்களின் பல வேண்டுகைகளுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

பெரும்பாலான மாநிலங்கள் விரைவாக மகுடநுண்ணி (கோவிட்-19) நோய்தொற்றுக்கு ஆளாகக்கூடிய மூத்தாளர்களுக்கும், முன்னர் நோயிற்கு ஆட்பட்டு அதனால் நலிந்த மறையிடர் ஆட்களுக்கும் முழுமையாக தடுப்பூசியினை இட்டு முடித்துள்ளது. ஆகவே இப்போது அனைத்து தரப்பினர்களுக்கும் மகுடநுண்ணித் தொற்றுத்தடுப்பூசிகள் இடப்பட்டு வருகின்றது.இது நிலைப்பாடுறுதல் நிலையாகும், இந்நிலையில் வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி இடுவது என்பது நோக்கமாகும் எனவும் ஊடகவியலாளர் கூடலில் அறிவிக்கப்பட்டது.

31.05.21 முதல் இத்தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன

விருந்தோம்பல் துறை

31.05.21 திங்கட்கிழமை முதல் உணவகங்களின் உள்ளறைகளிலும் உணவு உண்ண ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. ஒரு மேசையில் 4 இருக்கைகள் இடப்படலாம்.

வெளியரங்கில் ஒரு மேசைக்கு 6 இருக்கைகள் இடப்படலாம். அனைத்து விருந்தினர்களும் தமது தரவுகளை பதிவுசெய்ய வேண்டும். உணவு உண்ண இருக்கையில் இருந்தபின்னரே முகவுறையை கழற்றிக்கொள்ளலாம்.

இரவு 23.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை கடந்த 5 மாதங்களாக உணவகங்களுக்கு முடக்கநேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தடையும் நீக்கப்படுகின்றது.

தனி ஆட்கள் ஒன்றுகூடல்கள்

உள்ளறைகளில் ஆகக்கூடியது 30 ஆட்கள்வரை ஒன்றுகூட ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. வெளியரங்கில் ஆகக்கூடியது 50 ஆட்கள் ஒன்றுகூடலாம்.

தனியார் விழாக்கள் எடுத்துக்காட்டாக திருமணம் அல்லது பிறந்த நாள் விழா எனின் வெளியிடத்தில் ஆகக்கூடியது 50 விருந்தினர்கள் பங்கெடுக்க ஒப்புதல் அளிக்கப்படுகின்றது.

நிகழ்வுகள்

திங்கட்கிழமைமுதல் பொது நிகழ்வுகள் உள்ளரங்கில் 100 ஆட்களுடனும், வெளியரங்கில் 300 பார்வையாளர்களைக்கொண்டும் நடைபெறலாம். உள்ளரங்கின் பரப்பளவு 200 ஆட்களுக்கு போதுமானதாக இருந்தால் மட்டுமே 100 ஆட்கள் உள்ளுக்குள் இருக்கலாம்.இவ்விதியே சமய வழிபாடுகளுக்கும் விழாக்களுக்கும் பொருந்தும்.

விளையாட்டு மற்றும் பண்பாடு

தொழில்சாராத 50 விளையாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடலாம். இவ்விதி விளையாட்டினைக் கற்றுக்கொள்வோருக்கும் பொருந்தும்.

வெளியரங்கில் குழுவிசை நிகழ்வுகள் நடைபெறலாம். சுடுநீர்த்தடாகங்கள் மற்றும் நலவாழ்வுக்குளியல் நிலையங்கள் மீண்டும் திறந்துகொள்ளலாம்.

நேரில் வகுப்பு

உயர்பாடசாலைகளில் மற்றும் வயது வந்தவர்களுக்கான கல்வி நிலையங்களில் நேரில் தோன்றிக் கல்வி கற்பதற்கு இதுவரை அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஆட்கள் தொகைக்கான வரையறை என்பன நீக்கப்படுகின்றன.

தொடர்ந்தும் உரிய பாதுகாப்பு அமைவு மற்றும் பரிசோதனைமுறைமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் மற்றும் இம் முறைமைகளுக்கு மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

தொற்றுத்தடைக்காப்பு

நோயிலிருந்து நலன் அடைந்தோர்களுக்கு பயணங்களில் தொற்றுத்தடைக்காப்பாக தனிப்படுத்தலில் இருந்தும், தம் தரவுகளைப் சுகாதாரத்துறையிடம் பதியவேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்தும் 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்ப்படுகின்றது.

இவ்விதி தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கும் பொருந்தும். முழுமையான தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் பயணங்களில் இருந்து மீண்டும் நாடு திரும்புகையில் தமது தரவுகளைப் பதிவுசெய்யத் தேவையில்லை. ஆனால் மிகுந்த பெருந்தொற்று நாடுகளில் இருந்து மீண்டும் நாடுதிரும்புவோர்கட்கு இவ்விதி பொருந்தாது.

  வீட்டிலிருந்தபடி பணி

முறைப்படி தொடர்ச்சியாக மகுடநுண்ணிப் விரைவுப்பரிசோதனை செய்யும் நிறுவனங்கள் தமது பணியாளர்களை பணியகங்களில் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொள்ளலாம். வீட்டில் இருந்தபடி பணி என்பது இப்போது முன்மொழிவாக மட்டும் அறிவிக்கப்படுகின்றது.   

தொகுப்பு: சிவமகிழி

மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US