உள்நாட்டு வருமான சட்ட வரைவு நாடாளுமன்றில் நிறைவேற்றம்
உள்நாட்டு வருமான வரைவு சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றில் 103 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நாடாளுமன்றில் நடைபெற்றது.
இதன்போது அந்த சட்ட வரைவுக்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி 45 மேலதிக வாக்குகளால் உள்நாட்டு வருமான சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் மதிப்பீடு விவாதம்
நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது தினமாக வருமான வரைவு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதம் இடம்பெற்ற நிலையில் விவாதத்தின் இறுதியில் சட்டமூலத்துக்கு சபை அனுமதி அளிக்கின்றதா என சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன சபையை கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பை கோரினார்.
அதற்கமைய வாக்களிப்புக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன் பிரகாரம் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு மாலை 7,00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலத்துக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீன உறுப்பினராக இருக்கும் ஏ,எல்.எம். அதாவுள்ளஹ், நிமல் லான்சா ஆதரவாக வாக்களித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
45 மேலதிக வாக்குகள்
அத்துடன் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, விமல் அணி டலஸ் அணி எதிர்த்து வாக்களித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தயாசிறி ஜயசேகர, தமிழ் தேசிய கூட்டமைப்பில் சாணக்கியன் எம்.பி மாத்திரமே சபையில் இருந்து சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. வாக்களிப்பில் மொத்தமாக 63பேர் கலந்து கொண்டிருக்கவில்லை.
அதன் பிரகாரம் சட்டமூலத்துக்கு எதிராக 58 வாக்குகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருமான சட்ட சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
